ராச்சஸ்டர் வட்டார வாழ் தமிழ் மக்களின் பொங்கல் திருவிழாக் கொண்டாட்டம் வரும் தை 7 (ஜனவரி 20)ஆம் நாள், இந்துக் கோயிலின் தரைத்தளத்தில் அமைந்துள்ள அரங்கில் நடக்க இருக்கிறது. நம் சங்கத்தின் முதல் பொங்கல் விழாவிற்கு அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்குபெற அழைக்கின்றோம்.
மாலை 5:30க்கு தொடங்கும் விழாவில் பல்சுவை நிகழ்ச்சிகளும், சிறு மகிழ் போட்டிகளும், வினாடி வினா நிகழ்ச்சியும் நடைபெறும். பின்பு, அனைவரும் கொண்டுவந்த உணவுகளைப் பகிர்ந்துண்டுக் களையலாம்.
மேலும் இதனைப் பற்றி அறியவும், தங்கள் வருகையைப் பதிவு செய்யவும் கீழே உள்ள அழைப்புக்குச் செல்லவும்.
http://evite.me/rCTeDhrWxr
No comments:
Post a Comment