The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

Tuesday, August 21, 2018

ஆத்திச்சூடி அருந்தமிழ்ப் பள்ளி 2018

ஆத்திச்சூடி அருந்தமிழ்ப் பள்ளி 
 
 

சிறார்களின் தமிழ்க் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் (TGROC)  சார்பில் அமெரிக்கத்  தமிழ்க் கல்விக்கழகத்தின் (அ.த.க./ATA - http://www.amtaac.org/) துணையுடன் சனிக்கிழமைகளில் இரண்டு மணிநேரம் வெப்ஸ்டர் மற்றும் பிட்ஸ்ஃபோர்ட் ஆகிய இடங்களில் தமிழ் வகுப்புகள் எடுக்கப்படுகின்றது.

மாணவர்கள் குறைந்தபட்சம் இக்கல்வி ஆண்டில்(2018-19) முதல் வகுப்பில் படிப்பவராக இருத்தல் அவசியம். விருப்பமுள்ளவர்கள் கிழே உள்ள கூகுள் படிவ உரலி அல்லது க்யூ ஆர் குறியீடை பயன் படுத்தி 08/21/2018 குள்  விண்ணப்பிக்கலாம். 

குறிப்பு: 

அமெரிக்காவில் சுமார் 90 தமிழ்ப் பள்ளிகளில் தன் ஒருங்கிணைந்த பாடதிட்டத்தினைக் கொண்டுசேர்க்கும் அமெரிக்கத்  தமிழ்க் கல்விக்கழகம், மாணவர்கள் எந்த ஊர்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளிலும் தம் கல்வியைத் தொடர வழிவகுக்கிறது.

அ.த.க. வின் மொத்தமுள்ள ஏழு நிலைகளை எட்டிய மாணவர்களுக்கு வழங்கப்படும்  மொழித்திறன்  சிறப்பு மதிப்பெண்கள் மாணவர்களின் மேற்படிப்பிற்காகக் கல்லூரிகளில் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் முயற்சியினை அ.த.க. முன்னெடுத்துள்ளது.


No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny