The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

Thursday, February 28, 2019

அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா - கலை நிகழ்ச்சிகள் பதிய அழைப்பு

2nd year anniversary
நண்பர்களே!

ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் அடுத்த குடும்ப விழாவை கொண்டாட தயாரா? நாம் அனைவரும் சந்தித்து புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள  ஓர் அரிய வாய்ப்பு. இம்முறை இதற்கு வானிலையும் நமக்கு ஏற்றதாக இருக்கும் என்று நம்புகிறோம். நம் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா மே மாதம் 19-ம் தேதி 2019 சனிக்கிழமை நடை பெறவிருக்கிறது. அதற்கான இடம் மற்றும் பிற விவரங்கள் இ-வைட் தளத்தின் மூலம் அமைப்பாளர்களால் தனியாக அறிவிக்கப்படும்.

இதற்கிடையில் விழா என்று வந்துவிட்டால் நம் குட்டி சுட்டீஸ் கலை நிகழ்ச்சிகள்  இல்லாமலா? நம் குடும்ப உறுப்பினர்கள் முன் திறமைகளை காட்ட ஓர் அரிய வழி. 
ஆகவே தங்களது நிகழ்ச்சி பற்றிய விவரங்களை இங்கு சொடுக்கி பதிந்துவிட்டு ஒத்திகைகளைத் தொடங்குங்கள். நிகழ்வு பதிவுக்கான கடைசி நாள் மார்ச் 25 2019

பதிவு செய்ய => https://www.tgroc.org/p/event-registration-tgroc-2nd-anniversary.html

உங்கள் நிகழ்ச்சியைப் பதிவு செய்வதன் மூலம் விழா அன்று எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை நமது அமைப்பின் வலைதளத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட தங்களது சம்மதத்தை அளிப்பதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த முறையும் குழு நிகழ்ச்சிகளுக்கே  முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பெரியவர்களின் நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கிறோம். 

          தங்கள் நிகழ்ச்சியை கூடிய விரைவில், ஆட இருக்கும் பாடல்(ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் என்றால் அத்தனையையும்) அனுப்பிப் பதிவு செய்யவும். ஒரே பாடலை இரண்டு குழுக்கள் பதிவு செய்திருந்தால் இரண்டாவதாக பதிவு செய்யும் குழு வேறு பாடலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆகவே தாமதிக்காமல் உடனடியாக பதிவு செய்யுங்கள்.

இது உங்கள் குழந்தைகள் மட்டுமல்ல, உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நேரம்! எனவே உங்கள் பெயரையும் / நிகழ்வுகளையும் பதிவு செய்யுங்கள்.

        நமது சங்கம் இம்முறை பட்டிமன்றம்  அல்லது கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். நீங்கள் அதில் கலந்து கொள்ள விரும்பினால், உங்கள் பெயரையும், நீங்கள் விரும்பும் தலைப்புகளையும் அனுப்பவும்.

  கடைசியாக இந்த விழா வெற்றிகரமாக அமைவதற்கு உங்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் தகவலுக்கு TGROC Whatsapp குழுவை தொடர்பு கொள்ளவும். 


அன்புடன்,
அமைப்பாளர் குழு

English Version:

Dear TGROC Friends!

Are you all ready for one more entertaining get together this year ?? A great way to meet and keep making more friends while weather will be cooperating as well !! Our next celebration "TGROC’s 2nd Anniversary" will be held on 18th May 2019 (Saturday). Pls mark your calendar and Evite is on the way with more details. 

We want to open the registration for events now so that we get ample time to practice and rock on the stage with our talents in front of our friends and family. 
For event registration, please click here


Send in your registrations before March 25, 2019

This is a great opportunity, so don’t miss it out. 

By registering to the event you are automatically providing your consent to post the pictures of your event in TGROC’s website and social media.

Again this time, we are continuing to give priority to group events and encourage more adults to participate.

Please register with your selection of songs (if it is a medley of more than one song, pls list all songs). If more than one group has selected the same song, the first group to register with that song will be given preference to perform for it and the second group should select a new song. Pls keep in mind that song selection is first come first serve basis. So, please hurry up before it is too late.

We are planning to conduct a pattimandram or karutharangam on stage like last year. If you wish to be a part of it, pls send us your name and suggestions for topic. 

Last but not the least, We need all your support to make this event successful and entertaining. Please stay tuned to the TGROC Whatsapp group as always for more information about the event and updates as well.

Regards,
Organizer Team

No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny