The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

Saturday, March 17, 2018

பட்டையை கிளப்பிய ஆதவன்.. சிரிப்பொலியில் சிக்கிய அரங்கம்



ராச்சஸ்டரைக் கலக்கிய 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன்.

ஆதவன், விஜய் டிவியின் கலக்கப்போவது யார்? நான்காவது சீசனின் வெற்றியாளர். ஆதித்யா டிவியில் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான கொஞ்சம் நடிங்கபாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். பல குரல் வித்தகர். அருமையான பாடகர். இவர் தனது சமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, நியுயார்க் மாநிலத்தின் ராச்சஸ்டர் நகரத்தில் கடந்த சனி (03-மார்ச்-2018) இரவு நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்கி கூடியிருந்த நூற்றுக்கணக்கானவைர்களை மகிழ்வித்தார். பார்வையாளர்களும் கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சியில் உற்சாகத்தோடு பங்கெடுத்தனர். ராச்சஸ்டர் நகரைச் சேர்ந்த சம்பித் தனது மிமிக்ரி திறமையால் பார்வையாளர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார்.

ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு தொடங்க உள்ள தமிழ் நூல்களுக்கான நூலகத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது Greater Rochester Association of Malayalees New York (GRAMNY) அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தது மட்டுமல்லாது நூலகத்திற்கு மூன்று புத்தகங்களையும் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து, அந்தப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி நன்கொடையாக வழங்கினார்.



கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர்களான திரு.வள்ளிக்கண்ணன், திருமதி பார்வதி வள்ளிக்கண்ணன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். தமிழர் வாழ்வு முறை மற்றும் உணவு முறைகளைப் பற்றி திரு.வள்ளிக்கண்ணன் அவர்கள் உரையாற்றினார். கனடா நூலகத்திலிருந்து சில புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

சிரக்யூஸ் நகரிலிருந்து வருகை புரிந்திருந்த நண்பர் பாலாஜி தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் புத்தகங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தி நூலகத்திற்கு வழங்கினார்.

1981ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி இரவு காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் நினைவாக இந்த நூலகத்திற்கு “யாழ் நூலகம்” என்று பெயர் சூட்டப்பட்டது. நூலகம் இந்த வருடம் ஜூன் 1ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny